அவளின் கண்கள்-காதலன் பார்வையில்
கொட்டும் மழையின் முதல் சத்தம்!
தவழும் குழந்தையின் சின்ன முத்தம்!
பிரமாண்ட உலகில் அழகுகள் லட்சம்!
அத்தனையிலும்,என் தேவதையின் கண்கள்
அழகின் உச்சம்!!!
இன்னும் கண்டரியப்படவில்லை
எந்த மொழியும்,
கனிமொழியின் கண் அழகை கவியேன பாட...
இதுவரைப் பிறந்துவிட்டேனே..
என வாழ்ந்து வந்தேன்!
உன் பார்வையில் பரிசுத்தம் தந்தாய்
வாழ்கிறேன்...ஒவ்வொரு நொடியும் புதிதாய் பிறந்து..
வெயில் படாத வெண்ணிலா ..உன் விழிகள்!
கொஞ்சம் கலங்கினாலும் தாங்காது,
கிழிந்த நெஞ்சை தாக்கும் வலி உணர்கிறேன்!
என் அழகியின் புன்னகை பத்திரம்...
வான் இருள் நீக்கும் மூன்றாம் பிறை உன் புருவம்..
இந்த ஆணின் அதிகாரம் அழியும் துருவம்!
கொள்ளை அழகைப் பார்த்துப் பார்த்துப்
படைத்த வித்தகன் புருவத்தில் சிறு தவறிழைத்தான் போல...
அதனையும் திருத்தி சரி செய்து,
கொஞ்சும் அழகில்...
என்னை கொன்று தீர்க்கிறாய்!
வித்தைகள் பல கற்றாலும்,
உன் கண்கள் முன்னால்
நிஜம் புரியாத நிலையடைந்து காணாமல் போகிறேன்!
என்னதான் செய்கிறாய் உன் மாய விழிகளால்...??
காதல் சொன்னா நொடிகள்..
சேர்த்து வைத்து செய்துக்கப்பட வேண்டியவை!
வைர விழிகளிலே வெட்கம் பூத்தாய்,
செவ்வானமாய் சிவந்து!
இதயம் இரண்டும் உரையாடும்போது
மௌனம் அங்கே வந்தாடும்!..
அந்நிமிடம் கூட என்னவளின் விழிகள்
ஓயாமல் என்னோடு வாயாடும்!....
ஒரே ஒருமுறை மட்டும்
உன் விழித்திரைக்குள் அடைப்பாயா??
கருவிழியில் கரைந்து..சொல்லிவிடத்தான் துடிக்கிறேன்!
என் உள்ளமெல்லாம் நீயே என்று...
பாதைகள் அறியாமல் புயலோடு திரிந்தவனை
பூவுக்கே தெரியாமல் தேன் சுவைக்க மாற்றினாய்!
உன் கண்களுக்குள் தொலைந்து போகிறேன்..
கரை சேரும் கனவே இல்லாமல்...
அன்பே...
காதல் தவறே ஆகட்டும்!
உன் கண்களால் என்னை கைது செய்!
இமைக்குள் என்னை சிறை வை!
கடைக்கண் பார்வையில் தூக்கிலிடு!
அதற்கும் ஏங்கி காத்திருப்பேன்...
அணுஅணுவாய் அனுபவிக்க.......!