இராணி தேனீ
தினமென் கனவில் வந்து
இளம் பெண் அழகை இரசிக்கும்
காதற் கண்ணா...!
என் அருகில் வாட மன்னா!
நேருக்கு நேர் வந்து
என் கண் முன்னே நின்று
என்னோடு இணைந்து
நீ உறவாடுவது எந்நாள்?
கார்கால மழை வெள்ளம் போல்
கண்டபடி அலைந்து திரியுதே - என் நெஞ்சம்!
கடல் உன்னிடம் வந்து
நான் சேர்ந்தால்தானே - இன்பம்!
வெல்லக்கட்டி என்னுடம்பை
எறும்பாய் நீ தேடி வந்து
மெல்ல மெல்ல மென்று
உண்டாலென்ன முழுவது இன்று!
என்னை - நீ
தின்பதற்கு வருவாய - எறும்பே?!
உன்னுடன் கலந்து - தினம்
இருக்கவே விரும்புகிறேன்...!
இராணி தேனீ சொல்லும் செயலை
தவறாமல் செய்து முடிப்பதுதானே
இந்த வேலைக்கார தேனீ..!
புத்தம் புது தம்பதிக்கு
எந்த நாளும் சிவராத்திரிதானே...
இல்லையா - இளம் மயிலே?
இன்பம்தானே - இளமையிலே...!
இப்ப எதற்கு வெட்கம்?
நெறுங்கி வாயே - என் பக்கம்!
வெட்கத்தை போக்குமா ஒரு முத்தம்...
எந்நாளும் தேவை என்பதற்காக
சேமித்து வைக்கிறாயோ - மிச்சம்?!
நித்தம் நித்தம் தொட்டு விட வேண்டாமா- உச்சம்?
இன்னும் எதற்கு வெளிச்சம்...!