நான் கண்ட காதல்
நதியில் விழுந்த
இலையாய் மிதக்கிறது
என் இதயம்
புல்லில் விழுந்த
பனியாய் நனைகிறது
என் தேகம்
மலரின் தேனை பருகும்
வண்டுகளாய் இருக்கிறது
என் இதழ்கள்
மொட்டுகளை திறக்கும்
காற்றாய் வீசுக்கிறது
என் கண்கள்
கடலில் ஓயாத
அலையாய் ஓடுகிறது
என் காதல்...