முத்தம்

முத்தம்.....!

பூவிதழுடன் மோதி வண்டுகள் முத்தம்
தேனடை நிறைந்தது திவ்விய மதுரம்

பூமகள் மேனியில் கதிரவன் முத்தம்
பசுந்தளிர் துளிரத்து இயற்கைக்கு சுபிக்சம்

முகிலிடை தவழும் வெண்மதி முத்தம்
கவிபடை பாவலர்க்கு கற்பனை விருத்தம்

உமிழுடன் தெரித்த அலைமகள் முத்தம்
கரைபதி மேனியில் நுரையுடன் யுத்தம்

ஆதாம் தந்த முதல் மோக முத்தம்
ஆரம்பமானது பூமியில் ஜனனத்தின் சப்தம்......

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (9-Aug-16, 9:50 pm)
Tanglish : mutham
பார்வை : 155

மேலே