காஷ்மீர் மாநிலத்திற்க்கு வெள்ள நிவாரண நிதி ---செய்தித் தொகுப்பு

காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவமழை, அந்த மாநிலத்தை வரலாறு காணாத அளவுக்கு புரட்டி போட்டுள்ளது. அங்கு திரும்பிய இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அங்கு பாயும் ஆறுகளிலும் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் செல்வதால் மக்களின் குடியிருப்புகள் அனைத்தும் குட்டி குட்டி தீவுகளாக காட்சியளிக்கின்றன. இந்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் 175–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ராணுவம், விமானப்படை, கடற்படை மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது.பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதல்-மந்திரிகளும் காஷ்மீர் மாநிலத்திற்க்கு வெள்ள நிவாரண நிதியை அளித்து வருகின்றனர்.
காஷ்மீர் மாநிலத்தில் தற்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும். தனி பிரார்த்தனை விட கூட்டுபிரார்த்தனை தான் இரு மடங்கு வலிமை அதிகம்

எழுதியவர் : (10-Aug-16, 7:46 am)
பார்வை : 53

மேலே