ஜனவரி, 2011 படித்த செய்தித் தொகுப்பு -----ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர் புவியின் சொர்க்கம் என்று உலகம் அழைகிறது.
இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு மாநிலம் இது.
.இமயமலை தொடர்ச்சியில்அமைந்துள்ளது.ஜம்மு காஷ்மீர் மாநிலம்.வடக்கிலும்கிழக்கிலும் சீனாவை எல்லையாகவும், தெற்கில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞசாப் ஆகிய மாநிங்களை எல்லையாகவும், வடக்கிலும், மேற்கிலும் பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஆசாத் காஷ்மீர் பகுதியை எல்லையாகவும் கொண்டுள்ளது. ஜம்மு,காஷ்மீர், லடாக் ஆகிய மூன்று பகுதிகளை கொண்ட மாநிலமாகும்.

ஜம்மு பகுதியில் இந்து மதத்தினரும், காஷ்மீர் பகுதியில் இஸ்லாமியரும், லடாக்கில் பெளத்தர்களும் பெரும்பான்மையினராக உள்ளனர்.
இயற்கை அழகு நிறைந்த மலைகள் இம்மாநிலத்தில் உள்ளது. முன்பு ஒரே நிலப்பகுதியாக ஆளப்பட்டு வந்த காஷ்மீர் மாநிலம், சீனா, இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளால் மூன்று பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதி ஜம்முகாஷ்மீர் என்ற பெயரில் மாநிலமாக ஆளப்படுகிறது. இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பாக்கிஸ்தான் நாட்டவரும், சீன நாட்டவரும் இந்தியாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் என்றே குறிப்பிடுகின்றனர்இந்தியவில் உள்ள ஒரு மாநிலம்தான் இது.
எந்த ஒரு குடியரசு நாட்டிலும் குடியுரிமை உள்ளவன் அவன் தாய்நாட்டின் கொடியை தன் இல்லதில் ஏற்ற உரிமை உண்டு.இது ஆதிகாலம் முதல் வழக்கத்திலுள்ளது.
ஜம்மு:நாட்டின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் தேசியக் கொடியை ஏற்ற இந்திய குடிமக்களுக்கு உரிமை உண்டு என, காஷ்மீர் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.காஷ்மீரில் நடந்த வன்முறை சம்பவத்தையடுத்து அங்குள்ள நிலைமையை ஆராய மத்திய அரசு பார்வையாளர்கள் சிலரை அனுப்பியுள்ளது.
குடியரசு தினத்தன்று பாரதிய ஜனதா கட்சியினர் ஸ்ரீநகரின் லால் சவுக் பகுதியில் தேசியக் கொடி ஏற்ற திட்டமிட்டுள்ளனர். இதற்கு மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து பார்வையாளர் குழுவின் தலைவர் படோங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:நாட்டின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் தேசியக் கொடியை ஏற்ற இந்திய குடிமக்களுக்கு உரிமை உண்டு. பாரதிய ஜனதா கட்சியை லால் சவுக்கில் தேசியக் கொடி ஏற்ற அனுமதிக்க வேண்டும். காஷ்மீர் வன்முறை குறித்த பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தாலும், பா.ஜ.,வின் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது.
காஷ்மீர் மக்கள் அரசியல் ரீதியாக முதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் இந்த மாநிலத்தில் அமைதி நிலவ வேண்டும், என ஆவல் கொண்டுள்ளனர். காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கையை குறைப்பது குறித்து இம்மாநில மக்கள் இருவேறு கருத்துக்களை கொண்டுள்ளனர். இது குறித்து ராணுவம் மற்றும் உள்துறை அமைச்சகத்துடன் விவாதிக்கப்படும்.காஷ்மீரை இரண்டாகவோ, மூன்றாகவோ பிரிக்க இம்மாநில மக்கள் விரும்பவில்லை.
ஒன்று பட்ட காஷ்மீரை தான் விரும்புகின்றனர்.பாகிஸ்தானிலிருந்து எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக சரக்குகளோ, மக்களோ வந்து செல்வதில் எந்த பிரச்னையும் இருக்கக்கூடாது, என இம்மாநில மக்கள்
விரும்புகின்றனர்.இவ்வாறு படோங்கர் கூறினார்.
சற்றெ வரலாற்றினை பின் நோக்கினால் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியை முதன்முறையாக மொகலய பேரரசர் அக்பர் 1586 ஆம் ஆண்டில், தமது படைத்தலைவர்களான பகவன் தாஸ்,முதலாம் இராமசந்திரா ஆகியோரை கொண்டு வென்றார். மொகலாய படை காஷ்மீர் பகுதியை ஆண்டு வந்த துருக்கிய ஆட்சியாளரான யூசூப் கான் படையை வென்றது. இப்போருக்கு பின், அக்பர் முதலாம் இராமசந்திராவை ஆளுநராக நியமித்தார். முதலாம் இராமசந்திரா, அப்பகுதியில் கோயில் கொண்ட இந்து தேவதையான ஜம்வா மாதாவின் பெயரில் ஜம்மு நகரை நிறுவினார்.
1780 ஆம் ஆண்டு, முதலாம் ராமச்சந்திராவின் வழித்தோன்றலான ரஞ்சித் தியோவின் மறைவுக்கு பின், ஜம்மு காஷ்மீர் பகுதி சீக்கியரால், ரஞ்சித் சிங் என்பவரால் பிடிக்கப்பட்டது.
ரன்பீர் சிங்கின் பேரன் ஹரி சிங் 1925 ஆம் ஆண்டு அரியணை ஏற்றபோது, இந்திய விடுதலை போராட்டம் தீவிரமாக நடைபெற்று கொண்டு இருந்தது. 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி முடிவுக்கு வந்தது.இந்தியப்பிரிவினையின் போது இரு நாடுகளும் அப்போதைய இந்தியாவில் இருந்த அனைத்து சிற்றரசர்களும் தம் விருப்பப்பட்டு தாம் விரும்பும் படி இந்தியாவுடனோ, பாக்கிஸ்தானுடனோ இணையவோ, அல்லது சில குறிப்பிட்ட பகுதிகளில் தனி நாடாக செயல்படவோ ஒப்புக் கொண்டன. 1947 ஆம் ஆண்டு காசுமீர் அரசின் மக்கள்தொகையில் சுமார் 77% இசுலாமியர் வாழ்ந்து வந்தனர். ஒப்பந்தத்தை மிறி அக்டோபர் 20, 1947 அன்று பாக்கிஸ்தான் ஆதரவில் செயல்பட்ட பழங்குடிகள் காஷ்மீரை தாக்கி கைப்பற்ற முயன்றனர்.ஆரம்பத்தில் பாக்கிஸ்தானை எதிர்த்து போராடிய காஷ்மீர் அரசர் ஹரி சிங், அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி இந்தியாவின் ஆளுநர் மவுண்ட்பேட்டன் பிரபுவின் உதவியை நாடினார். காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க முன்வந்தால் உதவ இயலும் என்ற மவுண்ட்பேட்டன் பிரபுவின் நிபந்தனையின் பேரில், இந்தியாவுடன் இணையும் உடன்பாட்டு ஆவணம் கையெழுத்து ஆனது.ஒப்பந்தம் கையெழுத்து ஆனதும் இந்திய போர்வீரர்கள் மேற்படி பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தும் ஆணையுடன் காசுமீருக்குள் நுழைந்தனர். ஆனால், அவ்வாணைப்படி புதிய ஆக்கிரமிப்பை மட்டுமே தடுக்க வேண்டும். ஏற்கனவே பாக்கிஸ்தான் ஆக்கிரமித்த பகுதியை திரும்பப் பெறும் முயற்சி செய்யப்பட மாட்டாது.இம்முயற்சியின் போது இந்தியா இவ்விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு சென்றது.ஐநா தீர்மானத்தில், பாக்கிஸ்தான் தாம் கைபற்றிய பகுதிகளை விட்டு வெளியேறவும், இந்தியா, மக்கள் எந்த நாட்டுடன் வாழ விரும்புகிறார்கள் என்பதை அறியும் வகையில் ஐநாவின் கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்தவும் வழி கூறப்பட்டது. பாக்கிஸ்தான் தான் கைப்பற்றிய பகுதிகளை விட்டு வெளியேற மறுத்து விடவே, இந்தியாவும் ஐநாவின் கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்த விழையவில்லை. இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் நாடுகளின் அரசாங்க உறவுகள் பாதிப்படைந்த நிலையில், பல்வேறு காரணங்களால் இரு நாடுகளுக்கும் இடையே மூன்று போர்கள் காசுமீர் பகுதியில் நடந்துள்ளன. அவையாவன, இந்திய-பாகிஸ்தான் போர் 1965, வங்காளதேச விடுதலைப் போர் மற்றும் கார்கில் போர். முந்தைய காஷ்மீர் நிலப்பகுதியில் 60 விழுக்காடு பகுதியை இந்தியாவும், ஆசாத் காஷ்மீர் என்று அழைக்கப்படும் 30 விழுக்காடு பகுதியை பாக்கிஸ்தானும், 1962 ஆம் ஆண்டுக்கு பின் 10 விழுக்காடு பகுதியை சீனாவும் நிர்வகிக்கின்றன.

எழுதியவர் : (10-Aug-16, 8:16 am)
பார்வை : 86

மேலே