மன்னிக்க வேண்டுகிறேன்
நான் எழுதிடும் உண்மைகள் கூட
நாகரீகம் அற்று போனதேனோ
பொய்கள் ஜெயித்திட -பிணமாய்
போசுசுங்கும் உண்மைகள் - நிகர்
இல்லாத அன்பினை பொழிந்த
இனியவளே சந்தேகம் குடிகொண்டு
இழந்துவிட்டாய் நம் அன்பை
வருந்துகிறேன் என் செயல் கண்டு
வாய்பளிக்க வேண்டுகிறேன்
திருந்தி வாழ -செய்யாத
தவறுக்காய்
விரும்பாத வார்த்தைகளால்
விவாதப்பொருளா நம் வாழ்க்கை
வஞ்சனை சுற்றத்தின் வீண்
வம்புசுற்றிவளைப்புகளால்
மாற்றி விடாதடி உன்
மனதை- உன் அன்பை நான்
தொடரமல் ஓயமாட்டேன்
எந் நாளும்
சிநேகிதமாய் தோன்றிய நம் காதல்
சில்லறையாய் நொறுக்க கூட
சிந்திக்கும் சுற்றம் தன்னில்
சீர்கொண்டு வாழ்வோம் என்று
சிந்தனை கொள் அன்பே