அறுவகை புயல்களாய்

நின் மூக்குத்தி மலர்மீதினில்
அமர்ந்து அமரத்துவமடையும்
வாய்ப்பு வாய்த்திடாத
விரக்தியினில்
விருட்டென
வேகமாய்
வெகு வேகமாய்
வெளியேறிய
காற்றை காற்றுகளின்
ஒருசேர்ந்த
ஒற்றை கோப வெளிப்பாடே
அறுவகை புயல்களாய் ....

எழுதியவர் : ஆசை அஜித் (10-Aug-16, 4:46 pm)
பார்வை : 103

மேலே