காதல் வலி 03
என்னை
தள்ளி போக சொல்லாதே
தாங்க மாட்டேன் பெண்ணே காதல்
தாகம் கொண்ட என்
இதயம் இனியும் தாளாது நீ
இல்லாமல் கண்ணே !
உன்
கரு மேக கூந்தலில்
காணாமல் போன எனை
தேடி பிடித்து என் காதல்
தேவன் இவன் என உன்
தேன் மொழியில் சொல்வாயோ
என் உயிரே !
எனை திட்டிவிட்டு கூட போ
என்னிடம் பேசாமல் மட்டும்
போகாதே என்னுயிரே
பேசாத உன் உதடுகள் துண்டு துண்டாய்
கூறு போடுதே எனை !
உன் வெறுப்பால் நான்
உடைந்தே கண்ணீர் விடுவேன்
கவலை இல்லை
கண்ணே ஆனால்
என்னால் நீ
விடும் கண்ணீரை கண்டு கரைந்தே
விடுவேன் களிமண்ணாய் கவலையில்
பெண்ணே !
அழகின் அரசி அவள்
அன்பின் அரக்கி அவள்
அவள் பின்னால் அலைந்து
ஆவியாகப்போகும் எனை எடுத்துக்கொள்
ஆண்டவா என்னவள் கொண்ட அழகு
எனை கொள்வதற்கு முன் நீ
எனை எடுத்துக்கொள் ஆண்டவா !