நிர்ணயம்
கடை கோடியில் பிறந்து
கடல் அளவு உயர்ந்து
வானத்தில் வீடு கட்டி
வீட்டுக்கு வேலி வைத்து
காணும் இட மெல்லாம்
மூவண்ண கொடியை நட்டு
விண்ணில் இந்தியாவை விதைத்த
அறிவியலறிஞர் உறங்கி விட்டார்
அவர் விதைத்த விதைகள்
நாங்கள் உறங்க மாட்டோம்
இருபதுஇருபதில் இந்திய வல்லரசாகும்
இது இறைவன் நிர்ணயித்ததல்ல
விதியை மதியால் வெல்லும்
இந்திய இளைஞர்கள் நிர்ணயித்தது