தமிழ் மரபு அறக்கட்டளை-- இன்றைய கட்டுரை ---படித்ததை பகிர்கிறேன்

வெளியூர் சென்றிருந்த தலைவன் வெகுநாட்களாகியும் வீடு திரும்பவில்லையே என்ற கவலையுடன் இருக்கிறாள் தலைவி. “கவலையே வேண்டாம், குறித்த காலத்தில் தலைவர் வந்துவிடுவார்” என்று பலவாறாகத் தலைவியிடம் உறுதிபடக் கூறுகிறாள் தோழி. எனினும் தலைவி முதலில் தலைவன் சென்ற கடினமான பாதையையும், அதில் நேரக்கூடிய தீங்குகளையும் எண்ணி மறுகுகிறாள். அடுத்து, அவனது பிரிவால் மெலிந்துபோய்விட்ட தன் மேனியையும் அதற்குரிய காரணம் என்னவாயிருக்கும் என்று ஊரார் ஆளாளுக்குப் பேசும் ஏளனப் பேச்சையும் எண்ணி கவலையுறுகிறாள். ஒருவேளை தலைவன் வராமலே போய்விட்டால் அவனை எங்கெங்கே போய்த் தேடுவது – ஆற்றுவெள்ளம் ஒரு காதலனை அடித்துக்கொண்டு சென்றுவிட, அவனது காதலியாகிய ஆதிமந்தி கரையோரமாகவே சென்று அவனைத் தேடித்திரிந்தது போலத் தன் பிழைப்பும் ஆகிவிடுமோ என்று தலைவி அஞ்சுகிறாள். இந்த மயக்கத்தையும், கவலையையும், அச்சத்தையும் வெளிப்படுத்தும் அழகுமிக்க கவிதை இது.



அடிநேர் உரையும் பாடல் விளக்கமும்

வாடல் உழுஞ்சில் விளைநெற்று அம்துணர்
ஆடுகளப் பறையின் அரிப்பன ஒலிப்பக்
கோடை நீடிய அகன்பெரும் குன்றத்து
நீர்இல் ஆர்ஆற்று நிவப்பன களிறுஅட்டு
5ஆள்இல் அத்தத்து உழுவை உகளும்
காடு இறந்தனரே காதலர்

எழுதியவர் : (12-Aug-16, 8:03 am)
பார்வை : 98

மேலே