அமைதி

இந்த குளம் அமைதியாக இருக்கிறது

தாகத்தை தணிக்கிறது

தென்றலை குளிர்ச்சியூட்டுகிறது

வானம் இங்கே முகம் பார்த்து

நட்சத்திர பூக்களை அணிந்துகொள்கிறது

நெற்றியில் அழகிய நிலவுப்பொட்டு

வைத்துக் கொள்கிறது

மேகம் நீர் அருந்துகிறது

சாரல் துள்ளி குதிக்கிறது

விழுந்தது வானின் மீனோ

ஐயுற்று குதித்த மீன்கள்

விடை தெரியாமலையே விழுகிறது குளத்தில்

பயிர்களுக்கு பசுமை ஊட்டுகிறது குளம்

மலர்களுக்கு வண்ணம் தெளிக்கிறது

அமிர்தத்தை அள்ளி தருகிறது

விஷம் கொட்டப்படுகிறது

விழுங்க சிவன் இல்லை

சக்தி அழிகிறது

கடைவது அற்ப மானுடம்தானே

இருந்தும் இந்த குளம் அமைதியாக இருக்கிறது

அந்த பெண்ணினம் போல

எழுதியவர் : கே . எஸ் .கோனேஸ்வரன் (12-Aug-16, 10:28 pm)
Tanglish : amaithi
பார்வை : 109

மேலே