கடவுள் கொடுத்த பாத்திரம்
கனவுகளைக்கூட
காப்பி அடிக்கிறாய்,
நிஜங்களை ஏன்
ஏற்க மறுக்கிறாய்?
கடவுள் கொடுத்த பாத்திரம்
கடிந்துகொள்ளாமல் ஏற்றுக்கொள்,
நல்லதென்றாலும் இல்லையென்றாலும்
உனக்கென ஏற்பட்டது பார்த்துக்கொள்.
அட, உனக்கு புரிந்து விட்டது.
கண்ணாடியில்
ஒட்டியிருந்தது
பொட்டு...
முகம் பொருத்தி
மகிழ்கிறாய்.....!
,மகிழ்ச்சி..!