பலாத்காரம்
பசுமை மாறா பிஞ்சுக்களையும் -
பலாத்காரத்துக்கு உட்படுத்தும் ;
வெறிபிடித்த ஓநாய்களை -
வேரோடு அழிக்காதவரை ;
விடியல் என்பதும் இல்லை !
சட்டங்களும் சமாதானம் பேசுவதால் ;
சாட்சிகளும் மௌனமாகின்றன !
சட்டங்கள் திருத்தாதவரை ;
சாக்கடை புழுக்கள் கூட -
சாக்கப்பபோவதில்லை !
கதை அளப்பதை விட்டு ;
கள்ளிச்செடிகளை -
களை எடுப்போம் !