சொல்வதெல்லாம் உண்மை
காதல் சொல்லி ஏற்கலனா
கழுத்துல வெட்டு -நாடு
காமத்தால சீரழிஞ்சிப்போகுது கெட்டு
அள்ளிவச்சா பிணங்கள்கூட
திண்னுது துட்டு-இங்க
நீதி நியாயம் என்பதெல்லாம்
கசங்கின பட்டு
தற்கொலைக்கும் வழிகள்பல
சொல்லுது நெட்டு-இது
ரத்தத்தாலேதினம்தினமும்வைக்குது பொட்டு
தப்புக்கெல்லாம் டார்ச்சடிச்சி
காட்டுது ரூட்டு-டாஸ்மாக்
கடைகளுக்கு போட வேணும்
மொத்தமா பூட்டு
செய்தித்தாளில் பாதிப்பக்கம்
பதற வைக்குது- நாளும்
நடக்குமிந்த கொடுமகண்டு
நெஞ்சம் நடுங்குது
ஓட்டையான சல்லடையா
சட்டமிருக்குது-அத
ஒழுங்கு பண்ணி கடும செஞ்சா
நன்மை இருக்குது.....