வானம் வசந்தமாகி

வானமே உனது எல்லைக் கோடு
பூமியே உனது பரந்த வீடு
முயற்சியே உனது கோட்பாடு
பயிற்சியே உனது பூக்காடு
உழைப்பே உனக்கு பிற்பாடு

ஓடு ஓடு
ஓடு
எல்லைத் தாண்டி ஓடு

காற்றுக்கேது எல்லைக் கோடு
கடலுக்கேது கட்டுப்பாடு

உயிர்களிடத்தில் அன்பு காட்டு
அன்பிற்குண்டோ அடைக்கும் தாழு

உண்டு உண்டு
எல்லைக் கோடு
ஒன்றிற்கு உண்டு
கட்டுப்பாடு

பேசும் பேச்சிற்கு
வரையறை வேண்டும்
யாகாவராயினும் நா காத்தல் வேண்டும்

வரையறையோடு பேசு
வரைமுறையோடு பேசு
வன்முறையின்றி பேசு
பேசு பேசு பேசு
அன்போடு பேசு

தமிழனே
கலாச்சாரத்தையும்
பண்பாட்டையும்
உன் எல்லைக்கோடாய்
வைத்து அதை வழுவாமல்
சமுதாயத்தில்
என்னிலையிலும்
தன்னிலை மாறாது
என்றும் நீ
செம்மையாக வாழு
உண்மையாக வாழு

எல்லைக் கோடு
எல்லைக் கோடு
அறிந்து நீயும் வாழு
எல்லைகளின்றி
எல்லைகளின்றி
அன்பால் நீயும்
உலகை ஆளு

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (13-Aug-16, 4:12 pm)
பார்வை : 103

மேலே