அடைமழை
அடை மழை
மேகங்கள் நடுவே ஏற்பட்ட
சண்டையின் காரணமோ
கொட்டி தீர்த்த கனத்த
அடைமழைக்கு காரணம்
இல்லை பல ஆண்டாக
பட்டினி கிடந்து சாவையும்
சுகமாய் தாங்கும் இதயம்
கொண்ட விவசாயின்
கண்ணீர் துடைக்கவா அடை மழை
காற்று பூக கூட இங்கு இல்லை
சிறிய இடம் என்று கோபுரமாக
கட்டிய வீட்டுக்குள் புகுந்து
விளையாடவா இந்த அடை மழை
விடியும் முன்னே விழித்து கொண்டு
வியர்வை பெருக்கெடுக்க உழைத்தவன்
அழுக்கை துடைக்கவா இந்த அடை மழை
குட்டி குட்டி ஆசைகளோடு
துள்ளி விலையாடும் மழலைகள்
ஆடி பாடி கொண்டாடிவா
வந்தது அடை மழை
மாடி மேல மாடி கட்டி
மழையை கண்டு பயப்படும்
பிஞ்சு குழந்தைகள்
காகித கப்பல் விடவா அடைமழை
இயற்க்கைக்கு இனை எவனும் இல்லை
என்பதை உணர்த்தவா இந்த
அழகு அடை மழை
பாண்டிய ராஜ்