காற்றில் மலர்ந்த காகித பூவானேன்

கவிக்குயிலே உன் கூவல்களில் கரைக்கின்றாயோ என் கவலைகளை..
பாவப்பட்ட என் நெஞ்சத்தில்
பாசத்தை விதைக்க
வந்தாயோ..
கதறி துடித்து
என் விழி சிந்தும்
சிதறல்களை
சேகரிக்க வந்த
பெண்ணவள் நீதானோ..
உயிர் உரசும்
என் நினைவு பாதையில்
தடம் பதித்திட வந்த
தேவதை இவள் தானோ..
என் இறந்த கவிகளுக்கு
இசையமைத்து
உயிர் தர வந்த
என் உயிர் தோழி நீதானோ..
அடித்தோழி..!!
இன்று
உன் நேசக்காற்றில்
நான் மலர்கிறேன் "காகிதப்பூ"வாக..
வண்ணங்கள் இல்லாமல்
எண்ணங்களை மட்டும்
போர்த்திக்கொண்டு..!!
அன்பு தோழி சகிக்காக..!!
குட்டி..!!

எழுதியவர் : குட்டி (14-Aug-16, 11:51 am)
சேர்த்தது : நாகரீக கோமாளி (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 1046

மேலே