பணம்
நீ என்ன பணமா
இல்லை
பகுத்தறிவுப் பகலவனா ?
உழைப்பவனை உயர்த்துகிராய்
ஊதாரியை உதருகிறாய்
மனித மதிப்பின்
அளவுகோல் மனமன்று
பணம்
வியர்வையின் பரிசு நீ
கள்வனின் காதலி நீ
கலையில் அலைகிறோம்
மலையில் அயர்கிறோம்
உன்னைத்தேடியே
பணமே ஏழைக்கு
ஏன் எதிரியானாய்
அவர்கள் உழைக்கவோ ?
உயிரின்றி வட்டி எனும்
குட்டியை ஈன்றது எப்படி ?
உன் வட்டி
வாழ்கிறது எங்கள்
உயிர்களை வெட்டி !
பணம் மட்டுமே வாழ்க்கைஎன்றால்
நாம் வாழ சில
காகிதங்கள் போதுமே
அதில் காந்தி எதற்கு ?
மனித நேயம்
என்று பணனாயகத்தை
வெல்லுமோ
அன்றே கடவுள்
காப்பதை நிறுத்திக்கொள்வார் .
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
