விடியல்
மெல்லிரவை மெதுவாய் விழுங்கி
தரைதொட விரைந்த கீற்றொளியினை
புல்லின் நுனியில் அடக்கி புணர்கிறது
இக்காலை...
தூங்கி வடிந்த சோகையின்மேல்
கன்னச் சூட்டின் கதகதப்பில்
தண்ணீர் தெளித்து எழுப்புகிறது
பனித்தீண்டல்...
உலகெனும் ஓவியத்திற்கு
வண்ணம் பூசி உறங்கப்
போகிறது இரவு...
மலர்களை உதிர்த்து மகரந்த
சேர்க்கையில் மயங்கியபடியே
இருந்தன நட்சத்திர செடிகள்...
சிவந்தபடியே இருந்தது வானம்...
உங்களுக்கும் இரவு பகல் இப்படித்தானே இருக்கிறது
-வித்யா