தமிழின் அஞ்சலி
ஐயோ இறைவா!
ஏன் இப்படி...
சாதிக்க வந்தவரை
ஏன் சவப்பெட்டிக்குள் அடைத்தாய்
ஆனந்த யாழின்
நரம்பை
ஏன் அறுத்தாய்
உன் கண்ணில்
குறையா...
உன் காதில்
அவர் பாடல் ஒலிக்கவில்லையா.......????????????
கவிகளை படைத்த
கவிமகனுக்கு
என் இரங்கலை
எழுத வைத்து விட்டாயே
பாலை நிலத்து இரங்கலை
ஏன் தந்தாய்
புணர்ந்து கொண்டு போய்
காதல் செய்வாயோ...
சாமரம் வீசுவாயோ...
ஏன் இவ்வளவு
ஒரு வேகம்
தமிழின் கவி படைத்து
உன் விழி பார்த்து
தேன் சிந்தும்
பூ மலர்ந்து
நந்தவனம் கமழும்
நின் பாடலில் ஐயா..................
உன் பாதம் பணிகிறேன்
ஆயிரம் ஆயிரம்
மனிதன் உண்டு
ஒரு சிலர் தான்
மக்கள் மனதில்
வரலாற்றில் வாழ்வதுண்டு
நீங்கள் என்றுமே
பசுமரத்தாணி போலே
எங்கள் மனதில் பதிந்தே
இருப்பீர் ஐயா..............
மீண்டும் மீண்டும்
முளைக்கும்
வாழை
உங்கள் கவிகள்
எப்பொழுதும்
ஆளும்
எங்கள்
மனதை........................................