சும்மாவா கிடைத்தது சுதந்திரம்

அண்டி வந்தவன் ஆச்சி அமைக்க -
ஆண்ட மக்களோ அடிமை ஆகினரே !

சுகமெல்லாம் சுணங்கி போக -
துக்கம் மட்டுமே தொண்டைவரை !

கண்விழித்த மக்களோ கவலையில் நிற்க -
எதிர்த்தவனெல்லாம் எமலோகம் எனும் நிலை !

இருட்டில் விதைத்த புரட்சி விதை -
இமயம் வரை படர்ந்திடவே !
சிந்திய ரெத்தம் அத்தனையும் -
சீறிப்பாய்ந்தது சினம்கொண்டு !

ஆயுதம் தாங்கிய அன்னியனும் -
அடங்கியே போனான் அதிரடியாய் !

படிப்பினை நமக்கும் அதில் உண்டு -
பாடுபடுவோம் ஒற்றுமை எனும் கொடிபிடித்து !

நாட்டை காக்கும் வீரனாக -
மூவர்ண கொடியை மூச்சாக ;
நெஞ்சோடு பிடித்து நானும் சொல்வேன் ;
"ஜெய் ஹிந்த்" !

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (14-Aug-16, 10:29 am)
பார்வை : 2644

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே