கவிதைகள் கட்டாயமாக்கப்படட்டும்

கவிதைகள்
இலக்கிய உலகின் கல்வெட்டுக்கள்.
கவிஞர்கள் உயிர்வாழும் கல்தூண்கள்!

கல்லூரிச்சாலையில் இன்று
கவிதைச்சந்தடிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய்!

காலம் மாறி விட்டது
காதல் வசியம் இழந்தது!
இளைஞர்கள் இன்று இயந்திரமயமாய்
கள்ளமாற்றுசந்தை எங்கினும்
உள்ளமாற்றுக்கு இங்கே இடமில்லை!

காதல் இங்கே களைப்பாற
இளைப்பாற கடலை போட,
டைம் பாஸ் அவ்வளவு தான்
கவிதை அங்கே வெறும் நொறுக்குத்தீனி

ஒன்றிரண்டு இளைஞர்கள் எழுதும் கவிதைகள் கூட
சில அழகிகளுக்கு வெறும் வெண் சாமரமாக.
கல்லூரி வாழ்வுக்குப்பின் காகிதப்பூக்களாய்
இங்கே கவனிக்கப்படுவதில்லை!

புரட்சிக்காக எழுச்சிக்காக கூட எழுதப்படும்
கவிதைகள் கூட இங்கே கோலோச்சுவதில்லை!
ஜல்லிக்கட்டு எதிர்கொள்ளும் தடை போல
இங்கே கவிதைகள் முகச்சுளிப்பை எதிர்கொண்டால்

கவிதைகள் ரசிக்கப்படுவது இனி கவலைப்படவைக்கலாம்.
மனம் உணர்வு துடிப்பு கவிதை என்பதெல்லாம் ஒதுக்கப்பட்டால்
மொழியுணர்வு இனவுணர்வு இங்கே மொகஞ்சதாரோ ஹரப்பாவாய் விடும்.

பணத்திற்காக மட்டுமே பாடுபட்டு
மனமெல்லாம் முடங்கிப்போகும்படி
இவர்கள் எல்லாம் ஏன் இயந்திரமானார்கள்?

அழகும் இயற்கையும் ஆராதிக்கப்பட்டால் தான்
கலையும் இலக்கியமும் இங்கே கல்லா கட்டும்.
இல்லையேல் என்றோ ஒரு நாள் கல்லாகட்டும்
என எல்லோரும் இருந்திடப்போமோ?

கவிதைகளை மனப்பாடப்பகுதியாக்கி
கேள்வி கேட்டு மலிவடைய செய்தீர்,
எங்கேனும் கவிதைப்பூக்கள் சொரிந்ததோ
எவரேனும் கர்வப்பட கவிதை எழுதினோரோ?

தமிழ் தமிழ் என்று அரசியல் செய்யும் ஆன்றோரே
கவிதை என்பதை கட்டாயமாக்குவோம்,
மென்பொருள் இயந்திரங்களாய் போன இளைஞர்கள்
ஈரப்பதம் இல்லாமல் எங்கள் மொழிக்கு எதிரிகளாயினர்.

இந்த வறட்சிக்கு ஏதாவது செய்யுங்கள்,

விவசாயம் வறண்டு எங்கள் பூமியெல்லாம் வேறு தொழில் கண்டது
மொழி வறண்டு எங்கள் இனமெல்லாம் இனி எங்கு செல்வது?

பூலோகம் பூகோளத்தில் சரித்திரமயமாய் சாத்திரமானது
அதை மனித உணர்வுகளில் விதைத்து வையுங்கள்
உணர்வுகள் கவிதைகளில் எடுத்து சொல்ல முடியாவிட்டால்
உங்கள் ஊர் எல்லாம் இனி ஜெனிக்கப்போவது மௌன குருக்கள் மட்டுமே!

கருவேல மரமா எங்கள் கவிதை வளம்? தயை செய்து
காது கொடுத்து கேளுங்கள் கவியின் மகத்துவம்!

எழுதியவர் : செல்வமணி (10-Aug-16, 9:55 pm)
பார்வை : 146

மேலே