என் தமிழாசிரியர் நினைவாய் பல விகற்ப இன்னிசை வெண்பா சின்னஞ் சிறுவயதில்

சின்னஞ் சிறுவயதில் கற்ற தொருபாடல்
இன்றுமென் நெஞ்சில் அழியாமல் நிற்கவே
நற்தமிழ் கற்றதொரு ஆசிரியர் பாடமும்
கற்பித்த தேகார ணம்

அதைப் பாடல் என்னெவென்று கேட்கிறீர்களா .. கீழே கொடுத்திருக்கிறேன்.

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

"தம்மால் முடிவதனை தாமாற்றிச் செய்கலார்
பின்னை ஒருவரால் செய்வித்து மென்றிருத்தல்
செந்நீ ரருவி மலைநாடர் பாய்வரோ
வென்னீரு மாடாதார் தீ."

எழுதியவர் : (14-Aug-16, 2:20 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 101

மேலே