காந்தி அடிகள்
மேலாடை நீக்கி
மேலை நாட்டு ஆதிக்கம் நீக்கி
அகிம்சையை ஆயுதமாக்கி
அவமானங்கள் அனைத்தும் உள்ளடக்கி
ஆயிரம் தடைகளை தவிடுபொடியாக்கி
இதயத்தை இரும்பாக்கி
அந்நிய இருளை நீக்கி
விடுலை எனும் பேரொளி சுடரை
ஏற்றினாய் இந்தியாவில் ஐயா நீ !
கதர் ஆடையை அணிந்தாய்
உன் அழகுக்கு அல்ல நம்
உடையின் உணர்வு கொண்டு
நம் மானத்தை நாமே காப்பாற்றிக்கொள்ள
வேண்டும் என்பதற்காக தான் அணிந்தாய்
கதரை அண்ணலே நீ !
ஊர் ஊராக சென்றாய்
சுற்றி பார்க்க அல்ல
சிதறி கிடந்த மக்களை
தேசிய உணர்வூட்டி ஒன்றிணைப்பதற்காக
தான் சுழன்றாய் ஐயா நீ !
கையில் கோல் ஊன்றியது
உன் தளர் நடைக்கு அல்ல அந்நியனிடம்
கைதியாய் கிடந்த இந்திய மக்களின் அச்சத்தை
விரட்டி
விடுதலை உணர்வை மனதில் ஆழ ஊன்ற
செய்வதற்காக தான் கையில் கோல்
கொண்டாய் ஐயா நீ !
நீ இல்லை என்றாலும்
நீ விட்ட சுதந்தர காற்றையே
நாங்கள் இன்னமும் சுவாசிக்கிறோம்
தலைமுறை தலைமுறையாய் ................!
அழிவில்லை அண்ணலே உனக்கு என்றும் !