நாமுத்து
ஓ.....!
காலமே....!
தமிழின்
கட்டை விரலை முறித்து
கவிதை
பேனாவை உடைத்து
விட்ட போதிலும் ,
எடுத்துவிட முடியாது
நா.மு வை
எங்கள் மனதிலிருந்து,எழுத்துக்களாக எங்களுடன் பேசிக்கொண்டிருக்கும் வரையில்.!
வாழ்கையில் இல்லாத போதும்
வரிகளாக எங்கள் கவிஞன் வாழ்வார்...!
மரணமே வாசித்துக்கொண்டே போ...!
எங்கள் நண்பரின் மௌன கவிதையை....!