10-8-16 = தினம் ஒரு தத்துவ பாட்டு - 31 = 188

தோவாளை சந்தைக்கு பூவனுப்பும் பூவையரே
தோதான பூவனுப்பி சம்பாத்தியம் பார்ப்பீரே…!
சந்தைக்கு வந்த பூக்கள் சட்டென்று விற்றுப்போகும்
சாய்ங்கால வேளைக்குள்ளே சந்தையே காலியாகும்

இன்சார்ட்டிலும் பெண்களா என்று
இருதயம் குமுறும் ஆண்களே..!
இஜட் பிரிவு பாதுகாப்பிலும்
இனி எங்கள் பெண்களே..!

பாரதியின் புதுமைப் பெண்கள்
பாரதத்தில் அதிகம்தான்
பார்போற்றும் பாவைகளாய்
பரிணமிப்பது பெருமைதான் !

ஜக்கம்மாள் புரட்சி நடக்குது
ஜகத்தின் மூக்கை உடைக்குது
ஐதர்கால பெண்ணடிமை போக்க
ஐ பேடில் - அக்ரிமெண்ட் போடுது

நாத்து நட்டு நலிந்த கைகள்
துப்பாக்கி ஏந்தி காவல் காக்குது
சைக்கிள் ஓட்ட பயந்த கால்கள்
ராக்கெட்டில் ஏறி ஜமாய்க்குது

தேர்ச்சி விகிதம் ஆண்டுக்காண்டு
நீண்டு கொண்டேப் போகுது
தேர்வுத்துறையே தேர்ச்சியை எண்ணி
வியப்பில் அசந்துப் போகுது

பத்தாம் வகுப்பு முடிப்பதே
அப்போதெல்லாம் அக்கப்போராகும்
பட்டப் படிப்பு முடிப்பதே
இப்போதெல்லாம் சத்திய பிரமாணமாகும்

ஆணுக்கடிமை பெண்ணென்ற காலம்
ஐடெக் யுகத்தில் அவையெல்லாம் மாயம்
பெண்ணுக்கு உரிமை சரிபாகம் - இது
ஐ நா வே அங்கீகரித்த தீர்ப்பாகும்.

எழுதியவர் : சாய்மாறன் (15-Aug-16, 4:33 pm)
பார்வை : 131

மேலே