என் அம்மா மருதுபாண்டியன்க
அம்மா...
நான் அழகுதான்
நீங்கள் பெற்ற பிள்ளை அல்லவா
நான் வீரன்தான்
நீங்கள் தந்த தாய்ப்பால் உரம் அல்லவா
நான் கல்வியாளன் தான்
நீங்கள் கைப்பிடித்து எழுதிய
சரித்திரம் அல்லவா
நான் சிரஞ்சீவி தான்
நீங்கள் கொடுத்த மூச்சு
அல்லவா ..
நீங்கள் தந்த முத்தங்களின் ஆழமென
நான் என்கிறது என் கண்ணங்குழிகள் ...
நீங்கள் தீட்டிய மைதானே
நான் என்கிறது என் மச்சங்கள் ...
நீங்கள் கொஞ்சிய வாசங்கள்
நான் என்கிறது என் மகளின்
வியர்வைகள் ..
நீங்கள் எனை தாங்கிய மடியின் உணர்வு
நான் என்கிறது என் மகளின் பிஞ்சு கால்கள்
விளையாட்டாய் அவள் மடி சாய்கையில் ..
நீங்கள் தானே அம்மா
என் மகளாய் வந்து தாலாட்டுகிறீர்கள்..
அப்படியே எண்ணி காலங்கள் செல்லட்டும்
நான் கண்ணீரால் கரைய
மனமில்லை என் அம்மாவிற்கு
நான் போலியாக அழும்போது
அவள் உண்மையாகவே
கண்ணீர் சிந்துகிறாள்
என் மகள்...
மன்னிக்கவும்
எனை விட்டு என்றும் பிரியாத
மறுபிறப்பில்
என் அம்மா ....