மௌனம்கூட பிடிக்கல

அடக்கிவைக்க நினைத்தாலும்
அருவிபோலக் கொட்டுது !
உடனடியாய் வெளிப்பட்டு
உள்ளத்தைச் சொல்லுது !

கடமைகளைக் கருத்திற்கொண்டு
கவலைமறக்க நினைப்பினும்
தடங்கலின்றி தொடர்ச்சியாகக்
கன்னத்தில் வடியுது !

விழிதாண்டும் கண்ணீருக்கு
வேலிபோட முடியல !
வழிதேடி அலைந்தாலும்
வருத்தமின்னும் தீரல !

பழிபாவம் அறியாமல்
பதைக்குமுளம் புரியல !
மொழியறிந்தும் பேசமறந்த
மௌனம்கூட பிடிக்கல !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (16-Aug-16, 4:52 pm)
பார்வை : 85

மேலே