என் கணவன்
யாரும் எளிதில் நேசித்திடும் மனம்
கொண்ட அன்பானவனே .....!
மண்ணில் பிறந்த மாசு
மருவற்ற மாணிக்கமே..... !
என்னை குழந்தை போல் பாவிக்கும்
குழந்தை மனம் கொண்ட நீ
செல்லம்டா எனக்கு....!
ஓருயிர் ஈருடல் எனும் வார்த்தைக்கு
அர்த்தம் தந்தையடா .....!
ஒரு மனிதன் பல உறவுகளை
தந்த பொழுது அதிசியதேன் நான்...!
இறைவன் பூமியில் இறங்கி மனிதனாகி விட்டான் என்று அஞ்சுதே என் மனம்....!
பொறுமை என்னும் கடலில் எல்லை
இல்லாமல் நீந்துகிறாய் ....!
சான்றோன் எனக் கேட்ட தாய்
என்ற வள்ளுவரின் வார்த்தைக்கு
சான்றாவாய் நீ....!
உன்னை ஈன்றேடுத்த தாய்க்கு
ஒரு கோடி நன்றி பூக்கள்....!
மறு ஜென்மம் என்றிருந்தால்
இறைவனிடம் வரம் கேட்பேன்
உன் தாயாக பிறக்க.....!