ஆசைகளின் படியில்

சின்ன சின்ன என் நெஞ்சுக்குள்ளே
சிறகு விரிக்கும் ஆசைகள் கோடி
துள்ளி துள்ளி வரும் வெள்ளலையாய்
உள்ள மெங்கும் பொங்குதே கரைதேடி......


காலை கதிர் நிலம் விழுந்ததும்
சோலை மலராய் முகம் பூத்திடனும்
கோலம் போடும் அழகைக் கண்டு
நீலக்குயில் கானம் பாட வேண்டும்......


வான் மழையில் நனைந்துக் கொண்டு
தேன் துளியாய் நானுருக வேண்டும்...
வன்மம் அறியாத உறவுகளின்
வாசனையைத் தினம் நுகர வேண்டும்......


தாங்கி நிற்கும் மனதின் சோகமோ?...
மூங்கில் குழலின் வழிசெல்ல வேண்டும்...
இதயமே இறக்கின்ற வலி என்றாலும்
இறக்காதப் புன்னகை எனக்கு வேண்டும்......


கோபம் விளையும் போதும்
கொஞ்சு மொழி நான்பேச வேண்டும்...
கோலமயில் எனைப் பார்த்து
கோவில் சிலை வியக்க வேண்டும்......


பொய் இல்லாத கவிதை ஒன்றை
மெய் மறந்து நானெழுத
தமிழ் மொழியே எழுத்தாணியாய்
தமிழச்சி என்கை அமர வேண்டும்......


தென்றலாய் நாளும் தவழ்ந்து
திங்களாய் மேகத்தில் உலவ வேண்டும்...
மின்னலின் ஒளி போல மங்காது
கண்களின் ஒளி எனக்கு வேண்டும்.......


தேவதையே என்றெனைப் புகழ்ந்திடும்
தேகம் விரும்பாதக் காதலன் வேண்டும்...
மறுத்து காதலை வேண்டா மென்றாலும்
வெறுக்காத நண்பனும் வேண்டுமே.......

எழுதியவர் : இதயம் விஜய் (18-Aug-16, 8:05 am)
Tanglish : aasaikalin padiyil
பார்வை : 404

மேலே