மோதலில் பிறக்கும் காதல்

சிலபோது மோதலில் காதல் உருவாகுவது உண்டு

அந்த மோதலில் ஆணவம் ஆணவத்தை அடக்கிட

மோதல் மோனத்தை தந்து தரும்

பின்னர் அங்கு பிறக்கும் ஓர் மோகன மோகம்

மோதலில் உருவான காதல் பிணைப்பு

மன்மதனும் அறியாத மனித காதல் இது

ஆணவத்தில் பிறந்து ஆணவம் அழிந்தபின்

தோன்றும் காதல் இதை

மோன மோகன காதல் என்று நான் அழைப்பேன் ..

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Aug-16, 1:07 pm)
பார்வை : 106

மேலே