அழகோவியம்

பெண்ணாகிய ஓவியமே
பெண்ணே உன் கூந்தலை
நுகர்ந்தேன்...
மணக்கவில்லையே மல்லிகை
பூகூட...

ஒரு கூடை மலரை
உன் மொட்டு மேனியில்
படைத்திட...
மலர்களும் உன் மேனி
எங்கும் முத்தமிட...
உடல் கூச நாணத்தில்
நெளிந்திட...
உன் காதோரம் தொங்கும்
தோடுகள் உன் கண்ணங்களை
முத்தமிட்டு முத்தமிட்டு
சென்றிட...

செதுக்கிய சிலையே நீயோ
இந்திரன் கண்ணில் பட்டாள்
எடுப்பானே படை உன்னை அடைய...
உன் அழகினை பூஜிக்கும்
உடையவன் எவனோ
அவனே கொடுத்து வைத்தவன்...

உடையவன் வருமுன்
என் விழிகளுக்கு
விருந்தாகும் உன் அழகை
ரசிக்கவா எதிர்வீட்டில்
குடி புகுந்தாய்...
என் மனதினில்
தீயாய் புகைந்தாய்...

எழுதியவர் : பவநி (18-Aug-16, 1:14 pm)
பார்வை : 124

மேலே