சாயம் போன திருப்பூரு… !!!
அந்நிய செலாவணியை
அள்ளிக் குவித்தது
ஆயுத்த ஆடைத்தொழில்...
மலடாகிபோன மண்ணில்
எஞ்சியிருந்தது.....
விவசாயியின்
கண்ணீர்துளிகள்
உப்பளங்களாய்....
சுத்திகரிக்கமுடியாத
சாயக்கழிவுக்குட்டையில்
நிறம் மாறாத கொக்குகள்
நிறம் மாறிப்போனலும்
உயிரோடு கிடைக்குமாவென்று
ஒன்றிரண்டு மீன்களுக்காய்
காத்திருந்தன....
நொய்யலின்
கரையெல்லாம்
நோய்களின்
கறைகள் மட்டுமே...
மீந்திருக்கிறது
வேதனையிலும்
ரசிக்கிறேன்........
அத்தனையும்
அழுக்காக்கிக்கொண்டு
ஓடுகிற
ரசாயன ஆற்றில்
அழுக்குப்போக
துவைத்துக்கொண்டிருந்தான்
ஒரு சலவைத்தொழிலாளி.. !!!!
ஆடையில்லாத மனிதன்
காட்டுமிராண்டி...
ஆடையில்லாமல்
பூமியை
நிர்வாணமாக்குகிறவன் .... ??????