பெண்மையை ரசித்த பெண் -நான்
உன் கண்களுக்கு கண் பட்டு விட்டதோ ,
அதனால்தான் கண்ணாடி அணிந்தாயோ -தோழி ,
உன் முக அழகு கூடிவிட்டதே
அதனால்தான் உதட்டோரம் சிறு மச்சம்
திருஷ்டி பொட்டானதோ-தோழி ,
அய்யகோ ,
திருஷ்டி பொட்டோடு உன் முகம் தேவதையாய்...
மறுபடியும் கண்பட்டு விட்டதோ -இடை மெலிந்தாயோ ,
அதை கண்டு கொடி மலர் குடியேற கேட்டதோ,
மறுபடியும் கண்பட்டு குரல் மெலிந்ததோ -தோழி நீ ,
குயிலின் கூட்டாளி அனாயோ ......
மறுபடியும் கண்பட்டால்
இந்த பெண்மையை வர்ணிக்க
வார்த்தைகளற்று போய்விடுமோ -தோழி ......