உன் மடியில் தான் என் உலகம்

அன்றொரு நாள்
நானும் மாமாவும்
என் தோழனிடம் பேசிக்கொண்டிருந்தோம்...

என்னால் ஒரு ஐந்து நிமிடத்திற்கு மேல் ஒரே இடத்தையே பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
நான் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

என்னவருக்கு கைபேசியில்
அழைப்பு வந்துவிட
அதில் பேசிக்கொண்டிருந்தார்...

நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததில்
என் தோழனுக்கு பின்புறத்தில்
தூரத்தில் ஒருவன்
துப்பாக்கியால் குறிவைப்பதை பார்த்தேன்...

அதை பார்த்த பயத்தில்
வார்த்தை வரவே இல்லை...
உடனே என் தோழன் அருகில்
விரைந்து சென்றேன்...

நண்பனோ
ஏன் பிரபா
இப்படி ஓடி வர என்று பதட்டமாக கேட்க
நான் அவனை கீழே தள்ளிவிடவும்
துப்பாக்கி குண்டுகள்
என் நெஞ்சில் சொருகவும்
சரியாக இருந்தது...

இருவருக்கும்
அங்கே என்ன நடந்தது என்று
தெரியாமல்
ஒருநிமிடம் உறைந்துபோய்விட்டார்கள்

நான் நெஞ்சை பிடித்துக்கொண்டு
" மாமா " என்று அழைத்தபடியே
மண்ணில் சரிய
தோழன் எனை சரியாமல் பிடித்து மடியில் வாங்கிக் கொண்டான்...

என்னவர் என் அருகில் விரைந்து வருகிறார்...

தோழன் கையை பிடித்து
அழுகையை அடக்கிக் கொண்டு தைரியம் சொல்ல

நான் தோழனின்
கையை தட்டிக்கொடுத்து
" நீ நன்றாகவரவேண்டும் நண்பா..."

உனக்காக சாகிறேன்
என்பது எனக்கு மகிழ்ச்சியே...

அவரை விட்டுப்போகிறேனே என்ற ஒரே வருத்தமே...

நீ அவரை பார்த்துக்கொள் நண்பா...


ஹூ ஹூ ஹூ என்றே
மூச்சை இழுத்துக் கொண்டிருந்தேன் நான்

அருகில் வந்த கணவர்
இன்னொரு கையை பிடித்துக்கொண்டு
கதறி அழுகிறார்...

எனக்கு இருபுறமும்
என் கணவரும்
தோழனும்
எனை பார்த்து கண்ணீர் வடிக்க...

இருவரின் கைகளையும்
வலியில்
இறுக்கமாக பிடித்துக்கொண்டேன்...

வலிக்குது மாமா...
வலி தாங்க முடியல...


என்று கூற அவர் எனை தூக்கி
அழுது கொண்டே வெடுக்கென
அணைத்துக்கொண்டார்.

அப்பொழுதும் அவர் எனக்கு வலிக்கக்கூடாது என்று எண்ணி ஒரு புறமாக அணைத்தார்.அவர் ஒருபுறமாக அணைக்க காரணம்...
குண்டோ இதயத்தில்.....

நான் அவரை நெஞ்சோடு நெஞ்சமாக இறுக்கி
அணைத்துக்கொண்டேன்...

அவர் வலிக்கப் போகிறதடி
சொல்ல...
உங்களை அணைக்கும் பொழுது வலி கூட சுகம் தானே மாமா...

இருவரும்
அறிந்திருக்க வாய்ப்பில்லை
என் மூச்சு நின்றது என்பதை.....

ஒரு சில முறை மட்டும்
அறிந்திருப்பார்கள்
மூச்சு இழுத்துக் கொண்டிருப்பதை கேட்டு.....

அந்த இடமே அமைதி நிலவியது
இருவரும்
ஏன் மூச்சு பேச்சை இல்லை என்று பதற
அவர் எனை பிரிக்க முடியாமல் முயல

ஒரு கட்டத்தில்
என் கைகள் அவர்
தோளிலில் இருந்தும்
இடுப்பில் இருந்தும்
சரிந்தது...
பின் என் தலை
அவர் தோளில் இருந்து சரிந்து மடியில் வீழ்ந்தது.....

இருவரின் கண்களும்
எனக்காய் கண்ணீர் வடிக்கிறது...

அவர் என் நெஞ்சில் சாய்ந்து
அழுது கொண்டிருக்கிறார்.....

~ பிரபாவதி வீரமுத்து



நான் இதுவரை தோழிகளையே கதாபாத்திரமாக நகர்த்தியிருக்கிறேன்...

ஓர் ஆண் பெண் உண்மை நட்பை சொல்ல வேண்டுமென்று தோன்றியது
அது மட்டுமில்லாமல்
தன் மனைவியை நன்றாக
புரிந்து வைத்த கணவனை பற்றியும் சொல்ல எண்ணினேன்...

ஏன் ஆண் பெண் என்றாலே
காதலர்களாகத் தான்
இருக்க வேண்டுமா?
ஒரு உண்மை நட்பு
ஆண் பெண் பேதம்
பார்ப்பதில்லை...

மகாபாரதத்தில் எனக்கு மிகவும் பிடித்த நண்பர்கள்
கர்ணன் துரியோதனன்.....

அவர்களின் நட்பின்
ஆழத்தை விளக்கும்
ஓர் காட்சியை சொல்கிறேன்...

கர்ணனும் துரியோதனன் மனைவியும் பகடை விளையாடிக் கொண்டிருந்தார்கள்...

துரியோதனன் வருவதை
பார்த்த மனைவி
மரியாதைக்காக எழுந்து நின்றார்.
இதை அறியாத கர்ணன்.
எங்கே எழுந்திருக்க பார்க்கிறீர்கள்
என்று விளையாட்டின்
மும்முரத்தில். இருக்கையில் அமர வைக்க.
கையை பிடித்து இழுக்க.
கை ஏதார்ச்சையாக அவளின்
முத்து மணி மாலையை
அறுத்து.
முத்துக்கள் கீழே சிதறின.
இதை கண்ட துரியோதனன்
கர்ணனை பார்த்து
"எடுக்கவா
தொடுக்கவா என்று கேட்டார்"

அவன் எவ்வளவு பெரிய
கெட்டவனாக இருந்தாலும்
தன் மனைவியின் மீதும்
தன் நட்பின் மீதும்
உயர்ந்த நம்பிக்கை கொண்டவன் அவன்...

---------------------------------------------

ஒரு பெண் லட்சம்
ஆண்களுக்கு நடுவிலேயும்
தன் கணவனையே
மனதில் நினைத்துக் கொண்டு
கற்போடு இருக்கலாம்...

அவள்
உடல் சீர்குலைவதும்
இல்லை என்பதும்
அந்த லட்சம் பேரின்
எண்ணங்களில் தான் உண்டு

மனதின் எண்ணமே
மிக உயர்ந்த கற்பு...

எண்ணம் உயர்வாக
இருக்க வேண்டும்...
எண்ணமே செயலாகிறது...

ஒரு பெண்ணின்
வாழ்க்கையில்
தந்தையாகவும்
அண்ணனாகவும்
தம்பியாகவும்
தாத்தாவாகவும்
தோழனாகவும்
கணவனாகவும்
குழந்தையாகவும்
ஆண்கள் உண்டு...

யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று
அவளுக்கு தெரியும் நன்று...

கற்பு என்பது
பெண்ணை பூட்டி வைத்தால்
தான் என்று
நினைக்கும்
ஆண்கள்
அந்த ஆணிற்கு
தோதாய் சில பெண்கள்...

வெளியில் செல்லும்
பெண்களுக்கு
பாதுகாப்பை அளிக்கா கேவலமான இச்சமுகமும்
இச்சமுகம் எனும்
ஆண்களும்
கரும்புள்ளிகள் உலகில்...

---------------------------------------------

மனதில் ஒருவனை நினைத்துவிட்டால்
கட்டையில்
வெந்து போனாலும்
அவன் நினைவுகளோடே தான் வெந்து போவாள் பெண்.....

--------------------

உணர்வுகள் தான் உறவை விளக்குகின்றன...
உணர்வுகள் தான் உறவை
வளப்படுத்துகின்றன...
---------------------------------------------

அன்பு எனும் உணர்வுகளை
எல்லா உயிர்கள் மீதும் பொழிவேன்...
ஆனால்
என் உணர்ச்சியையும்
வலிகளையும் உன்னிடம்
மட்டும் தானே சொல்லுவேன்... ஆற்றுவேன்...
உன்னில் என்னையே இழப்பேன்...
என்னில் உன்னை மட்டுமே ஏற்பேன்...
என்னை நீ மட்டும் தானே
முழுமையாக உணர்வாய்
தலைவா...

அன்பு எல்லா உயிர்களிடத்திலும்

காதல் ஒருத்திக்கு ஒரு முறை தான் வரும்
அது ஒருவன் மீது மட்டுமே வரும்...
அந்த ஒருவன் ஆன
உன் நினைவுகளோடு
அந்த ஒருத்தி ஆன
நான்
என்னோடு
உன் நினைவுகளையே
சுமந்து கொண்டு
மண்ணோடு போவேன்...

வாழும் பொழுது
நீயும் நானுமாய்
உன் கரம் பிடித்து
உன் தோள் சாய்ந்து
உன்னுடனே நடந்து வருவேன்...
என்னால் நடக்க முடியவில்லை
என்றால்
நீ தூக்கிக் கொள்வாய் (தூக்கிக் கொள்ள வேண்டும்)
நீ இளைபார வேண்டுமென்றால்
உனக்காகவே
என் மடியும்
மார்பும் தோளும் என்றும் இருக்கின்றன...
நான் தூங்க வேண்டுமென்றால்
உன் நெஞ்சில் தலை வைத்தே தூங்குவேன்...
உன் கண்ணீரை துடைக்க என் கரம் இருக்கிறது.
நீ முகம் புதைத்து அழ
என் மடி இருக்கிறது...
நான் அழவும் எழவும்
என்னுடன் நீ இருக்கிறாய் என்ற
உணர்வை நீ தந்தாலே போதும்...
உன் அன்பு மட்டும்
போதும் என்று நான் சொல்லவே மாட்டேன்...
எப்பொழுதும்
எனை உன்னோடு தாங்கிடு...
உன் அன்பை என்னில் பரிமாறிக் கொண்டே இரு...
நான் உன்னில் என்னை எப்பொழுதுமே பரிமாறிக் கொண்டே தான் இருக்கிறேன்...(நிறைய தம்பதிகளுக்கு புரிதல் இல்லாமல் போவதே இதில் தான்.
ஒருவர் அன்பை பரிமாறிக்கொண்டே இருப்பார்.
இன்னொருவர் அன்பிற்காக ஏங்க வைத்திடுவார்...
அன்பு என்பது இருவரும் பரிமாறிக்கொள்ளும் மொழி...
ஒருவர் என்றால்
அந்த உறவில் உயிர் இல்லை...
#அன்பை பரிமாறிக்கொள்ளுங்கள் எல்லா உயிர்களிடத்திலும்...
உதாரணத்திற்கு
இரு உள்ளங்களின்
அன்பின் சமமான பரிமாற்றங்களை
சொல்ல வேண்டுமென்றால்
இக்கவிதையிலேயே மேலே
நான் அன்பின்
பரிமாற்றங்களை வெளிக்காட்டி இருப்பேன்..

அது:

என்னால் நடக்க முடியவில்லை
என்றால்
நீ தூக்கிக் கொள்வாய் (தூக்கிக் கொள்ள வேண்டும்)

ஒரு உயிர் சொல்லாமலேயே
இன்னொரு உயிருக்கு அதன் உயிரின்
உணர்வுகள் புரிந்திருக்க வேண்டும்
அதை தானாகவே நிறைவேற்றியும் இருக்கும்
இது தான் உண்மை அன்பு...

என் தோழியை பற்றி சொல்கிறேன்
எனக்கு வலிக்கும் பொழுதெல்லாம்
என் கண்ணை பார்த்தே அறிந்து விட்டு
அப்படியே இருக்க மாட்டாள்
என் தலையை அவள் தோளில் சாய்த்து
தலையை வருடி ஒன்றும் இல்லையடி
சரியாகிடும் என்பாள்...

எந்த இடம்
யார் இருக்கிறார்கள்
என்றெல்லாம் அறியாது
நட்பு
கட்டிபிடி வைத்தியத்தில்
எவ்வளவு வலிகளையும் ஆற்றிவிடும்...

அன்பு என்பது வலியை சொல்லாமலேயே புரிந்துகொள்ளும்
அவர்களுக்கு என்ன தேவை என்பதை தானாகவே செய்யும்..
ஒரு நாளும் சொல்லிக் காட்ட தெரியாது...
அதற்கு நடிக்கவும் தெரியாது)
உன்னில் தான்
இருக்கிறேன்...
உனை விட்டு ஒருநொடியும் பிரிய மாட்டேன்...

இதழுக்கும் இதழுக்கும்
சண்டை பிடித்தால்
இதழ்களோடு பேசிக் கொள்வோம்...

தோளுக்கு தலை கொடுத்தேன்...
உன் வாளுக்கு எனை கொடுப்பேன்...
உனக்கே உயிர் கொடுப்பேன்...
உன் மடியில் துயிலுவேன்...
உன் நெஞ்சில் ஒட்டிக்கொள்வேன்...
உன் உடைகளுக்குள்ளே
வருவேன்...
உனக்குள்ளே நானே இருப்பேன்...
உன் மடியிலே
உயிரை முடிப்பேன்..
என் முந்தானையில்
உனை முடிந்த அன்றே
என் மாராப்பாய்
நீயாக உணர்ந்தேன்...
என் கால நேரம் நீயாக கண்டேன்...
உன் காலத்தில்
என் உயிரை கிடத்தக் கண்டேன்...
என்னில் உனை நிரப்பி
உன்னில் எனை கரைத்து
நம்மை சமப்படுத்தினேன்...
நாம் என்பது
நம் உலகம் மாத்திரமே...
அதில் யாருக்கும் அனுமதி இல்லை...
இனி இவள் உன் வசம்...
உனையன்றி இவளுக்கு வேறு என்ன தெரியும்...
வேறு என்ன அறிவாள்...

நீ தானே என் உலகம்...
நீ தானே எனக்கு யாவும்...
உயிரே உடலை எடுத்துக்கொள்................

நாதா உனக்கே
இவ்வரிகள்
என்னோடு
சேர்த்து...

அன்பே...
நீ அறிவாயல்லவா...
என் ஆசையை...
என் கடைசி ஆசையை...
என் உயிர்
உன் மடியில் தான்
போக வேண்டும்

வாழும் வரை
நான் உன்னோடு தான்...
சாகும் போதும்
உன் மடியில் தான் நான்...

~ உன் மனைவி பிரபாவதி வீரமுத்து

---------------------------------------------

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (19-Aug-16, 3:27 pm)
பார்வை : 1414

மேலே