புதிர்

மாலைச் சூரியன்
மரங்களில்
மஞ்சள் பூசியது....!
வயல் காற்று
சுகந்த வாசனையுடன்
இனிமையாக வீசியது....!
இருள் சுழவே
வானத்து பறவைகள்
பேரணி நடத்தின....!
காலத்தின் கட்டாயம்.!
நதிக்கரை ஓரத்தில்
அவன் வருவான் என்று
இன்னும் அவள்
காத்திருக்கின்றாள்....!
காதலின் புதிரை புரியாதவளாய்....!