இன்றைய அவசர காதல்

இன்று பல இளைஞர்கள்

காதல் என்ன என்று தெரியாமல்

எதையோ காதல் என்று நினைத்து

நிழலை நிஜம் என்று நினைத்தது போல்

"காதலிக்கின்றனர்" பின்னே

மணம் முடிக்கின்றனர்

திருமணத்தில் என்ன மணம் என்றும் தெரியாமல் !



மணமான சில நாட்களிலேயே

காதல் கசந்து போனது போலும் !

எங்களுக்குள் அபிப்ராய பேதங்கள்

இவை எடுக்க முடிய "சிக்கு"

"விவாக ரத்தே" இதற்கு முடிவு

என்று முடிவெடுத்து







நீதி மன்றங்கள் தேடி அலைகின்றனர்

முடிவில் விவாக ரத்தும் பெறுகின்றனர்

இவர்கள் இப்படி வாழ்க்கையுடன்

விளையாடுவதேன் ? வாழ்க்கையை

வீணாக்கி கொள்வதேன்?

இன்றைய சமுதாயத்தின்

கலாச்சார வீழ்ச்சி, கட்டுப்பாடின்மையே

இதற்கு கரணம் என்பேன்


காதல் தெய்வீகமானது

அது தரும் உறவு (கணவன்-மனைவி)

அதுவும் புனிதமானது

இதை அறிந்தால் உறவில்

பிரிவேது ?

காதல் வேறு ஈர்ப்பு வேறு

இதை இவர்கள் அறியவில்லை போலும் !



கைபேசி மூலமும்,ட்விட்டர்

மற்றும் பேஸ் புக் மூலமும்

எத்தனைதான் பரிமாற்றங்கள்

செய்தப்பினினும் இன்றைய

நவீன காதலர்கள் பலர்

திருமணம் ஆனபின்

காதலை காற்றில் பறக்க விடுவதேன்?

இளைஞர்களே காதலை சற்று புரிந்து கொள்ளுங்கள்

காதல் வாழ்வதறகு, வாழ வைப்பதற்கு

இன்றைய காதலர்

நாளைய கணவன்-மனைவியர்

ஆம் தாய்-தந்தையர்

நம் வழியில் தான்

நம் பிள்ளைகள் செல்வர்

இதை அறிந்து கொள்ளுங்கள்

நல்லவர்களாய் இனியவர்களாய்

நாட்டின் நன் மக்களாய் வாழுங்கள்

நமது கலாச்சாரத்தை அறிந்து கொள்ளுங்கள்

அது உங்களை என்றும் கை விடாது

----------------------------------------------

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Aug-16, 2:02 pm)
பார்வை : 89

மேலே