புறாவுக்கு ஒரு ட்விட்டர்
சாம்பல் வெள்ளை நிறத்தில்
ஒரு வண்ணப் புறா
சாயந்திர வேளையில்
சாளரத்தின் அருகில் வந்து
ஏதோ சொல்லுது
சோடியை காணவில்லையோ
இன்னும் வீடு திரும்பவில்லையோ
என்ன செய்வது ?
ட்விட்டரில் ஒரு சேதி அனுப்பவோ ?
----கவின் சாரலன்