கவிபழகிய கடல்
கவிபழகிய கடல்
சிலர் வயிற்றை குறைக்க
நடந்து பழகிய பயிற்ச்சிகூடம்
சிலர் வயிற்று பசிக்காக
மீன்பிடித்து பழகிய அலுவலகம்
சுகவாசிகள் காதல் பழகிய இடம்
சுற்றுலாவாசிகள் நேரம்போக்கி வசித்த இடம்
சுற்றுலாதளமாய் வேலைவாய்ப்பு
வழங்கிய இடம்
சிலர் நீந்தி பழகினர்
சிலர் படகோட்டி பழகினர்
நீர்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து பழகின
நானோ கவிதை பழகிய திடல்...கடல்
எப்பொழுது சென்றாலும்,வா
எடுத்துகொள் உன் கவிதையினை என
தாராளமாய் அள்ளி தெறிக்கும்
தண்ணீர்தாய் ..கடல்
-இராஜேந்திரன் புவன்