பறவைகள் நாங்கள்

விசித்திர பறவைகள் நாங்கள்
வீசித்திரியும் பொருட்களை அழித்திடும்
பறவைகள் நாங்கள்


பேசித்திரியும் பறவைகள் நாங்கள்
பேசாதா மொழிகலே
இல்லாத பறவைகள் நாங்கள்


தூய்மை படுத்திடும்
பறவைகள் நாங்கள்
துயரம் இல்லாத பறவைகளும் நாங்கள்


உறவை கண்டதும்
நாங்கள் எங்களை
மறந்திடும் பறவைகள் நாங்கள்
பகைவனை ஒன்றாய் தாக்கிடும் பறவைகள் நாங்கள்.


உயிருக்கு உறக்கம் இல்லாத
பறவைகள் நாங்கள்
எமனுக்கும் நடுங்காத பறவைகளும் நாங்கள்


ஒற்றை துண்டை இரண்டையாய் உண்ணும்
பறவைகள் நாங்கள்
பாசம் என்றதும் பகைமறந்து
பறந்திடும் பறவைகளும் நாங்கள்


சுமை ஏற்று காணத
பறவைகள் நாங்கள்
சுகம் என்று பேசாத
பறவைகளும் நாங்கள்


பணமில்லாத பறவைகளும் நாங்கள்
உணர்வுள்ள பறவைகளும் நாங்கள்




பொத்துவில் அஜ்மல்கான்
இலங்கை

எழுதியவர் : கவிஞர் அஜ்மல்கான் (20-Aug-16, 6:26 pm)
Tanglish : paravaikal naangal
பார்வை : 116

மேலே