​நிலவே நில் ​

​நீண்ட நித்திரையிலும்
நிறைமதி நின்முகத்தை
நினைத்திடும்
நிலையெனக்கு !

நிசப்தத்தின் நிலையால்
நிலவொளி நீட்சியால்
நிறைந்திடும் நிம்மதியும்
நிலைத்திடும் நிச்சயம்
நின்றிடுக நீயும் !

நீந்திடும் ​நிலவே
நிலையாக நில் ..!


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (20-Aug-16, 10:14 pm)
பார்வை : 133

மேலே