என் பேனா அசைகிறது....

என்னைக் கேட்டுத்தானா
என் நகமும் தலை முடியும்
வளர்கின்றன?
கடற்கரை மணலில்
தோண்டிய பள்ளம்போல
ஊறிவரும் எண்ணங்கள்
என்னுள்ளே
சுரந்து கொண்டே
இருக்கின்றன!

தாளாத துன்பத்திலும்
தத்தளித்துத் தவிக்கையிலும்
ஆழ்ந்த அமைதியிலும் அக்களிப்பின் விழிப்பிலும்
என் பேனா அசைகிறது...!

எழுதியவர் : சி.பிருந்தா (21-Aug-16, 1:27 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 91

மேலே