நிலவே நில்

நினைவும்
நித்திரையும்
நீயே...
நிரந்தரமே...

நிசமும்
நிழலும்
நிராயுதபாணியா?
நிலையா?

நீங்கா
நீரும்
நிலமும்
நீக்கமற
நிரம்பியவை

நிசப்தமான
நிகழ்வில்
நிறமில்லா
நீளமான
நிலவில்
நிலமகளே
நில்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (22-Aug-16, 6:55 am)
Tanglish : nilave nil
பார்வை : 92

மேலே