விழியோரம் நந்தவனங்கள் காதல் கவிதை
![](https://eluthu.com/images/loading.gif)
விழியோரம் நந்தவனங்கள் ...
எழுத்து :மருதுபாண்டியன். க
அவள் வீட்டு அனையா விளக்கு நான் :
அன்பே
சிக்கி முக்கி உராய்ந்தால்
தீப்பொறி தோன்றுமாம் ...
நம் விழிகளில் சந்திப்பின்
விளைவோ
என் தலைமீது எப்போதும்
ஒளிவட்டம் ...
மின்சார தென்றலே!
ஓய்ந்து விடாதே
அனையா விளக்கென
சுற்றி திரிகிறேன்
உன் இல்லம் நோக்கி ....
அவள் வீட்டுக்கோலங்கள் நான் :
மச்சக்கன்னியே!
உன் மச்சங்களின் மீதங்கள்
என் இதயத்தில் கோலமிட்டு
ரசிக்கின்றன ...
வண்ணங்கள் வரிசையில்
நின்றாலும்
நானல்லவா முதலில் ..
எனைத்தூவி
பூர்த்தி செய்துவிடு ...
அவள் வீட்டு தோட்டம் நான் :
விழித்தென்றலே!
உன் பத்துவிரல்
முகம் கண்டு வெட்கத்தில்
சிவந்த ரோசாக்கள் நான்
பல வண்ணங்களில் மாறி மாறி பார்க்கின்றேன்
உன் ஆடையின் அதிசயத்தில்
அலங்காரமாய் போகின்றேன் ...
அவள் வீட்டின் ஒவியங்கள் நான் :
மயில் இறகுத்தூரிகையே!
உன் மொத்த அழகின்
வர்ணனைகளை
ஓவியமாய் வரைந்து வரைந்து
தோற்றுப்போய்
உன் வீட்டுச்சுவரில் தொங்குகிறேன் ...
விருந்தினர்கள்
எனை எப்படி ரசித்தாலும் அது ஒரு
கலைஞனின் தோல்வி ரகசியம் ...
அவள் வீட்டுக்காரன் நான் :
அகத்தின் அழகே!
ஒரு கைப்பிடி
என் இதயத்தின்
பேரழகி அவள்..
என்
ஆண்மையின் அன்பு சொத்துக்கள்
அனைத்தும் அவள்
அழகிற்கு அடிமை ...
காதல் சாசனத்தில்
உயிலென ...
எழுதிவிட்டேன்
என் காதலியென்று ...
அன்றோ
பக்கத்துவீட்டுக்காரன் ..
இன்றோ
அவள் விழியோரம் தோன்றிய
நந்தவனத்தில்
காதல்கணவன் நான் ...
அதோ அந்த
குயிலாக கவிபாடுகின்றேன் ...