குப்பைக்காரன்
தெரு நாயின் ஓயா குறைப்பு
கருமமே கண்ணாய் இருந்தான் அவன்
குப்பைத் தொட்டிக்குள் அவன் தலை
ஓரத்தில் நின்று இருந்தது ஓர்
இரு சக்கர வண்டி
அதன் மேல் அவன் மனைவி
பெரிய பையுடன் காத்திருந்தாள்
அவன் பொறுக்கி வரும் குப்பைக்காக
அவள் கையில் ஓர் சிறு பிள்ளை
மேலாப்பு மறைவில் பால் குடித்த வண்ணம்
குப்பையிலும் திரவியம் தேடும்
இவன் பிச்சை எடுப்பதில்லை
இனிதே வாழ்கின்றான்
இயற்கை அரவணைப்பில்