என் நாடு என் பார்வையில்
நடு ரோட்டில் நின்று
இந்தியா என்று கூறும் போது
எவரும் உன்னை மிதிக்கவில்லை
என்றால்
நீ சுதந்திரம் பெற்றவன் தானே......
கள்ளி பால் கொடுத்த நாடு
இன்று
கல்வி பால் கொடுக்கிறது
என்றால்
நீ சுதந்திரம் பெற்றவன் தானே......
பரந்த பாரதம் இருக்க
நீ
அண்டை நாட்டில் வாழ
சம்மதிக்கும்
என்றால்
நீ சுதந்திரம் பெற்றவன் தானே......
வாழணும் என்று
நினைக்கும் போது வாழலாம்
சாகனும் என்று
நினைக்கும் போது சாகலாம்
என்றால்
நீ சுதந்திரம் பெற்றவன் தானே......
ஊழலை ஒழி என்று கோசம் போட்டாலும்
நீயா
ஊழல் செய்தலும்
இங்கு கேட்க ஆள் இல்லை
என்றால்
நீ சுதந்திரம் பெற்றவன் தானே......
நடு ரோட்டில் நின்று கொன்றாலும்
உன்னை கேக்க ஆள் இல்லை
என்றால்
நீ சுதந்திரம் பெற்றவன் தானே......
சுதந்திரம் மனதில் வேண்டும்......
என் நாடு உண்மையில் பெற்ற
சுதந்திரம் யார் மனதிலும் இல்லை
இங்கு மனிதனும் இல்லை....
இறுதியில்
நாம் பெற்ற சுதந்திரம்
இன்று சாதி கையில்
பத்திரபாக பந்தாட படுகிறது....