-புளி-ன்னா பேரு வைக்கிறது

-"புளி"-ன்னா பேரு வைக்கறது?
@#@@
அடியே அம்பிக்கா, யாரடி கூப்புட்டூட்டு இருக்கற?
@@@@@#
வாங்க பாட்டிம்மா. எம் பொண்ணுங்க இம்லி, அம்லிகா ரண்டு பேரையும் வெகு நேரமா காணம். அவுங்களத்தாங் கூப்படறன்.


@#@@
அதென்னடி பொட்டப் பிள்ளைங்களுக்கு அழகான தமிழ்ப் பேருங்கள வைக்கறத விட்டுட்டு இம்மிலி, அம்மிலிக்கா-ன்னு பேரு வச்சிருக்கீங்க? அம்மிக்கல்லுனு வைக்கறதுதானே?

@##@
என்ன பாட்டிம்மா செய்யறது. தமிழை வளக்கவேண்டிய பொறுப்பில உள்ளவங்களே இந்திப் பேரு வெறி பிடிச்சு அவுங்க பிள்ளைங்களுக்கு வாயிலெ நொழையாத அர்த்தம் தெரியாத இந்திப் பேருங்கள வச்சு பெருமப்பட்டுக்கறாங்க. தமிழரா பொறந்ததுதான் நாம செஞ்ச பாவம். இந்திக்காரங்க யாருமே அவுங்க பிள்ளைங்களுக்கு தமிழ்ப் பேர வச்சதா வரலாறு கெடையாது. தமிழங்கதான் அணுவளவும் தனமானமும் மொழி சார்ந்த இன உணர்வும் இல்லாதவங்க. ஊரோட ஒத்துப்போகணுமேன்னுதான் எம் பொண்ணுங்களுக்கு இந்திப் பேருங்கள வச்சிருக்கோம் பாட்டிம்மா.
@###
அதெல்லாம் சரி தான். இம்மிலி, அம்மிலிக்கா-ன்னா என்னடி அர்த்தம்?

@##@@@
பாட்டிம்மா ஒரு இந்தி தொலைக்காட்சித் தொடரல் வர்ற ஒரு பொண்ணு பேரு இம்லி. அதுக்கு அர்த்தம் தேடறபோது அம்லிகா-ங்கற பேரும் கெடச்சச்சு. இம்லி இந்திச் சொல். அம்லிக்கா சமஸ்கிருதச் சொல். இம்லி, அம்லிகா-ங்கற ரண்டு பெயர்ச் சொல்லுக்கும் "புளி" ன்னு அர்த்தம்.
@%%@@
அட எழவே, அழகான பொம்பளப் பிள்ளைங்களுக்குப் போயும் போயும் புளி-ன்னா பேரு வைக்கறது.
@##@@
பாட்டி நாங்களாவது அர்த்தம் தெரிஞ்ச பேருங்களா வச்சிருக்கோம்னு சந்தோசப்பட வேண்டியது தான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றையும் மொழி சார்ந்த இனப்பற்றையும் வளர்க்க. பிற மொழிப் பெயரின் பொருள் அறிய.

எழுதியவர் : மலர் (25-Aug-16, 11:40 am)
பார்வை : 258

சிறந்த நகைச்சுவைகள்

மேலே