தூய்மையான நெல்லிக்காய்

வாடியம்மா பொன்னி, அஞ்சு வருசம் கழிச்சு அமெரிக்காவ்லே இருந்து நம்ம கிராமத்துக்கு வந்திருக்கற. உனக்கு ரண்டு பெண் கொழந்தைகங்க இருக்கறதா உன்னோட மாமியா போன வருசமே சொன்னா. எங்கடி அந்தப் புள்ளைங்கள காணம்.
@%@@@
நல்லா இருக்கீங்களா பாட்டிம்மா?
@@@@@@@
எனக்கென்னடி கொறச்சல் பொன்னி? சமையல் வேலையெல்லாம் நாந்தான் பாத்துக்கறேன். எம்பது வயசிலயும் முப்பதே வயசான உன்னவிட சுறுசுறுப்பாத்தாண்டி இருக்கறேன். எங்க உன்னோட வீட்டுக்காரரும் பொண்ணுங்களும்.
@%#@@
பாட்டிம்மா அமலா, அம்லா ரண்டு பேரையும் நம்ம கிராமத்து கோயிலுக்கு அவுரு அழச்சிட்டு போயிருக்கறாரு.
@%@@@
என்னடி பொன்னி உம் பொண்ணுங்க ரண்டு பேருக்கும் ஒரே இந்திப்பேர வச்சிருக்க?
@#@@##
இல்ல பாட்டிம்மா. மூத்தவ பேரு அமலா. அமலா- ன்னா 'தூய்மையான' ன்னு அர்த்தம். எளயவ பேரு அம்லா. அம்லா- ன்னா நெல்லிக்காய்-ன்னு அர்த்தம்.
@%@@@#
அப்ப உம் பொண்ணுங்க பேரு தூய்மையான - நெல்லிக்காய். பாவம் நம்ம தமிழ் மொழில பேருக்கு பஞ்சம். உப்பு, புளி, மொளகா, நெல்லிக்கா-ன்னெல்லாம் பிள்ளைங்களுக்கு பேரு வச்சுக்கறீங்க. நல்லா இருந்தா சரிடி பொன்னி.
@#####%###@@@@@@@@@@@@@@@@@@@
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப்பற்றையும் மொழி சார்ந்த இனப்பற்றையும் வளர்க்க.

எழுதியவர் : மலர் (25-Aug-16, 3:52 pm)
பார்வை : 185

சிறந்த நகைச்சுவைகள்

மேலே