ஊடலின் சுகம்

பூத்த உன் முகம் கண்ணுற்றேன்
அத்தனையிலும் குளிர்ச்சியின் மஞ்சம்.

கூடிய மதிப்படைந்து உன் சொத்துக்கள்
மனதை நோகடிக்கவே செய்கின்றன.

நடந்து முடிந்த நஷ்டங்களையே
நினைத்து மனம் பதபதைக்கிறது.

ஆறுதலுக்காக எதையோ எண்ணித்
துடிக்கிறது துயிலாத நெஞ்சம்.

உன்னுடனேயே அருகினிலே களித்தே
கிடக்க விழைகிறது எந்தன் உயிர்.

உன்மீது கொண்ட என் ஊடலின்
உச்சக் கோபம், இவ்வளவு சுகம் தருமாயின்
ஊடலிலேயே இருந்துகொண்டிருந்திருப்பேன்.

எழுதியவர் : jujuma (27-Jun-11, 6:14 pm)
சேர்த்தது : nellaiyappan
பார்வை : 363

மேலே